Posts

Showing posts from January, 2026

ஆங்கிலப் புத்தாண்டுக் கவி -2026 !

  2026.....🙏🙏 வேறு ஓர் ஆண்டும், விரைந்தே வந்ததே  வேகமாய்,அவனி வாழ்வுதனை மேலும் வளமாக்க, உறவுகள், உயிர்கள் , நண்பர், நலம் விழைவோர் , உரைப்போம் நம் அன்பு தனை நன்றி தனை , இறை இயற்கை இன்னிசை இயல் ஆக்கம்  இவையுடன் இசைந்தே பெற்றோம் பேருயர்வு , இனிதே இயம்புவோம் நம் இன்னுணர்வு தனை !💕 வெல்வோம் இந்த ஆண்டும் , இயற்கையைப் புரிந்து  இயற்கையைப் போற்றி , இயற்கையைக் காத்து  இயற்கையுள் கலந்து , வெல்வோம் இந்த ஆண்டும் ,  இயற்கையே இறை என உணர்ந்து  இறை என்றும் ஒன்றுதான் எனத் தெளிந்து ! வாழ்க வையகம் , வாழ்க வளமுடன் !!!