Posts

Showing posts with the label கவி வரிகள்

ஆங்கிலப் புத்தாண்டுக் கவி -2026 !

  2026.....🙏🙏 வேறு ஓர் ஆண்டும், விரைந்தே வந்ததே  வேகமாய்,அவனி வாழ்வுதனை மேலும் வளமாக்க, உறவுகள், உயிர்கள் , நண்பர், நலம் விழைவோர் , உரைப்போம் நம் அன்பு தனை நன்றி தனை , இறை இயற்கை இன்னிசை இயல் ஆக்கம்  இவையுடன் இசைந்தே பெற்றோம் பேருயர்வு , இனிதே இயம்புவோம் நம் இன்னுணர்வு தனை !💕 வெல்வோம் இந்த ஆண்டும் , இயற்கையைப் புரிந்து  இயற்கையைப் போற்றி , இயற்கையைக் காத்து  இயற்கையுள் கலந்து , வெல்வோம் இந்த ஆண்டும் ,  இயற்கையே இறை என உணர்ந்து  இறை என்றும் ஒன்றுதான் எனத் தெளிந்து ! வாழ்க வையகம் , வாழ்க வளமுடன் !!!

எழில் குன்றா ஏற்றமிகு எம் தமிழ் ! 2020-பொங்கல் வாழ்த்து -கவி

 எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! பொங்கல் வளமும் பொங்கல் மகிழ்வும்  பொங்கலோ பொங்கலென்று பொங்கியே இன்று  எங்கள் உறவும் எங்கள் உழவும் என்றும் உயர நன்றே நவின்றோம்! எங்கும் மகிழ்வாய் எவரும் நலமாய் ஏழ் திக்கும் ஓங்கியே திகழ, எழில் குன்றா ஏற்றமிகு எம் தமிழோ எத்துணையும் குறுகி நலியாது, சிற்சிலரின் சிறுமைச் செயலால்  சிற்றளவும் மங்காது, சிதறி விலகாது, சித்தர் தம் அருளால் சிறிதும் அருகாது, சீறி எழுந்து சிம்மமென சிலிர்க்க, சிறந்தே சீர்வளம் செவ்வியே ஓங்க, சினமின்றிச் சிந்தித்தே சூளுரைப்போம்!