எழில் குன்றா ஏற்றமிகு எம் தமிழ் ! 2020-பொங்கல் வாழ்த்து -கவி

 எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்

இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!


பொங்கல் வளமும் பொங்கல் மகிழ்வும் 

பொங்கலோ பொங்கலென்று பொங்கியே இன்று 

எங்கள் உறவும் எங்கள் உழவும்

என்றும் உயர நன்றே நவின்றோம்!


எங்கும் மகிழ்வாய் எவரும் நலமாய்

ஏழ் திக்கும் ஓங்கியே திகழ,

எழில் குன்றா ஏற்றமிகு எம் தமிழோ

எத்துணையும் குறுகி நலியாது,


சிற்சிலரின் சிறுமைச் செயலால் 

சிற்றளவும் மங்காது, சிதறி விலகாது,

சித்தர் தம் அருளால் சிறிதும் அருகாது,

சீறி எழுந்து சிம்மமென சிலிர்க்க,

சிறந்தே சீர்வளம் செவ்வியே ஓங்க,

சினமின்றிச் சிந்தித்தே சூளுரைப்போம்! 












Comments

Popular posts from this blog

ஆங்கிலப் புத்தாண்டுக் கவி -2026 !