ஆங்கிலப் புத்தாண்டுக் கவி -2026 !

 2026.....🙏🙏



வேறு ஓர் ஆண்டும், விரைந்தே வந்ததே 

வேகமாய்,அவனி வாழ்வுதனை மேலும் வளமாக்க,

உறவுகள், உயிர்கள் , நண்பர், நலம் விழைவோர் ,

உரைப்போம் நம் அன்பு தனை நன்றி தனை ,

இறை இயற்கை இன்னிசை இயல் ஆக்கம் 

இவையுடன் இசைந்தே பெற்றோம் பேருயர்வு ,

இனிதே இயம்புவோம் நம் இன்னுணர்வு தனை !💕


வெல்வோம் இந்த ஆண்டும் ,


இயற்கையைப் புரிந்து 

இயற்கையைப் போற்றி ,


இயற்கையைக் காத்து 

இயற்கையுள் கலந்து ,


வெல்வோம் இந்த ஆண்டும் , 


இயற்கையே இறை என உணர்ந்து 

இறை என்றும் ஒன்றுதான் எனத் தெளிந்து !


வாழ்க வையகம் ,

வாழ்க வளமுடன் !!!

Comments

Popular posts from this blog

எழில் குன்றா ஏற்றமிகு எம் தமிழ் ! 2020-பொங்கல் வாழ்த்து -கவி